தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/பனி மூட்டத்தால் சாலை விபத்து 12 பேர் பலி

பனி மூட்டத்தால் சாலை விபத்து 12 பேர் பலி

பனி மூட்டத்தால் சாலை விபத்து 12 பேர் பலி


ADDED : நவ 10, 2026 09:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 09:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோபியா: ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பனிமூட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் அருகருகே நிகழ்ந்த இருவேறு விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்தனர்.

பல்கேரியாவின் தலைநகர் சோபியாவையும் பர்காஸ் துறைமுகத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இன்று (நவ.,10) காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியவில்லை.

அப்போது இரு இடங்களில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. லாரிகள் உட்பட 86 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே, 10 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். 46 பேர் காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.

விபத்து காரணமாக நெடுஞ்சாலை சில மணிநேரம் மூடப்பட்டு மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us