நேபாளத்தில் மாணவர் போராட்டத்தால் புதிதாக துவங்கப்பட்ட 120 கட்சிகள்
நேபாளத்தில் மாணவர் போராட்டத்தால் புதிதாக துவங்கப்பட்ட 120 கட்சிகள்
ADDED : நவ 11, 2025 06:57 AM

காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, அடுத்தாண்டு மார்ச்சில், அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், புதிதாக 120 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த செப்டம்பர் 4ம் தேதி பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு, சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தது.
ராஜினாமா இந்த தடை இளைய தலைமுறையினரிடையே பெரும் கோபத்தை ஏற் படுத்தியது. மேலும், நாட்டில் தொடர்ந்து வரும் நிர்வாக சீர்கேடு, ஊழலுக்கு எதிராகவும் போராடும் நிலைக்கு ஆளாகினர்.
இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 8ம் தேதி காத்மாண்டு மற்றும் பனேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடு பட்டனர்.
மறுநாள், அந்நாட்டின் பார்லிமென்ட் கட்டடம் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு தீ வைத்து கொளுத்தும் அளவுக்கு போராட்டம் தீவிரமடைந்தது.
போ ராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து, அப்போ தைய பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார். இரண்டு நாட்களில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பவுடேல், அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தலைமையிலான இடைக்கால அரசை நியமித்தார்.
இதையடுத்து, செப்டம்பர் 11ம் தேதி இடைக்கால அரசின் பிரதமராக சுசீலா பொறுப்பேற்றார்.
இந்நிலையில், நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதி பொதுத் தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகளை நேபாள தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது-.
மின்வெட்டு இதற்கிடையே, கடந்த இரண்டு மாதங்களில், அந்நாட்டில் 120 புதிய கட்சிகள் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து, இவை துவங்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, இடைக்கால அரசில் எரிசக்தி துறை அமைச்சராக உள்ள குல்மான் கிஷிங் புதிய கட்சி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் கிஷிங், அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக, நேபாள மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தார்.
இவர் தன் பணிக் காலத்தின் போது, நேபாளத்தில இருந்த கடுமையான மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வந்ததில் பெரும் பங்கு வகித்தவர்.
'நேபாள ஜனசேவா கட்சி' எனும் பெயரில் கட்சி துவங்க உள்ள கிஷிங், கட்சி துவங்குவதற்கு ஏதுவாக தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், தன் கட்சியில் 'ஜென் இசட்' எனும் இளம் தலைமுறையினரை இணைத்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஊழலு க்கு எதிராக போராடும் இளம் தலைமுறையினருடன் இணைந்து, புதிய அரசியல் சக்தியை உருவாக்க கிஷிங் முயற்சிக்கிறார். இது நேபாள அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

