" என் குடும்பத்தில் 140 கோடி பேர் " - குவைத்தில் மோடி உரை
" என் குடும்பத்தில் 140 கோடி பேர் " - குவைத்தில் மோடி உரை
ADDED : டிச 22, 2024 12:03 PM

குவைத் சிட்டி: 'என் குடும்பத்தில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் நான் இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டும்' என குவைத்தில் இந்திய தொழிலாளர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு, அவர் இந்திய தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும். நம் விவசாயிகள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள், நமது தொழிலாளர்கள் வயல்களில் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்று நான் நாள் முழுவதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
இவர்கள் எல்லாம் 10 மணி நேரம் உழைத்தால், நானும் 11 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் 11 மணி நேரம் வேலை செய்தால், நானும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இரண்டாவது விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக கடினமாக உழைக்கிறீர்களா இல்லையா? நானும் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன், என் குடும்பத்தில் 140 கோடி பேர் இருக்கிறார்கள், அதனால் நான் இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தமிழில் வணக்கம் சொன்ன பிரதமர் மோடி!
குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டத்தில், தொழிலாளர் ஒருவர் நான் தமிழகத்தை சேர்ந்தவர் எனக் கூறியதும் பிரதமர் மோடி தமிழில், 'வணக்கம்' என கூறினார்.
இதற்கு, 'வணக்கம், தேங்க்யூ சார்...! என அந்த தொழிலாளர் மகிழ்ச்சி பொங்க கூறினார்.