வங்கதேச ரசாயன கிடங்கில் தீ 16 பேர் உயிரிழந்த பரிதாபம்
வங்கதேச ரசாயன கிடங்கில் தீ 16 பேர் உயிரிழந்த பரிதாபம்
ADDED : அக் 15, 2025 02:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்கா,:வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 16 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்; எட்டு பேர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடை தொழிற்சாலையின் ரசாயன கிடங்கில் நேற்று காலை தீவிபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவி அருகில் இருந்த ஆடை தொழிற்சாலையிலும் பற்றியது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின், தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆடை தொழிற்சாலையின் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் இருந்து, 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்கள் அனைவரும் நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.