தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/செங்கடலில் கப்பல் மூழ்கியதில் 2 இந்தியர் மீட்பு; ஒருவர் மாயம்

செங்கடலில் கப்பல் மூழ்கியதில் 2 இந்தியர் மீட்பு; ஒருவர் மாயம்

செங்கடலில் கப்பல் மூழ்கியதில் 2 இந்தியர் மீட்பு; ஒருவர் மாயம்


UPDATED : நவ 18, 2026 07:28 PM

ADDED : நவ 18, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 07:28 PM ADDED : நவ 18, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நைரோபி: செங்கடலில், பாப் எல் மண்டேப் ஜலசந்தி அருகே சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கிய விபத்தில், இரண்டு இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர், காணாமல் போன மற்றொரு மாலுமியை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையாக உள்ளது பாப் எல் மண்டேப் ஜலசந்தி. மேற்காசிய நாடான ஏமனின் ஹவுதி பயங்கரவாதிகளுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருவதால், இப்பகுதியில் வர்த்தக கப்பல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், பாப் எல் மண்டேப் ஜலசந்தியில், அல் பதா என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதாகவும், அதிலிருந்த இரண்டு இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும், கென்யாவில் உள்ள இந்தியத் துாதரகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன மூன்றாவது மாலுமியை தேடும் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் பனாமா நாட்டு கொடியுடன் சென்ற எரிவாயு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் பணியாற்றிய, 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும், ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us