உள்ளடக்கத்திற்கு செல்ல
2 மாதத்திற்கு பின் அமெரிக்கா – ஈரான் மீண்டும் மோதல்
2 மாதத்திற்கு பின் அமெரிக்கா – ஈரான் மீண்டும் மோதல்
ADDED : நவ 18, 2026 07:28 PM
அ நிறம் | அளவு
டெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா, கடந்த, பிப்.,ல் தொடர்ந்த மோதலால், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. கடந்த, 2 மாதங்களாக நேரடி தாக்குதல்கள் ஏதும் நடக்கவில்லை.
அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும், வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க படைகள், இன்று (நவ.,18) ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள கெஷ்ம் தீவு மீது வான்வழித் தாக்குதலை நடத்தின. அமெரிக்க தரப்பிலிருந்து இது தற்காப்பு நடவடிக்கை என்று கூறப்பட்டது.
இதற்கு பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தையும், பஹ்ரைனில் உள்ள ஷேக் இசா விமான தளத்தில் அமெரிக்கா இயக்கும் ரேடார் அமைப்பையும் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
