அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
ADDED : மே 18, 2025 08:11 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜிம்மில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெவடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் செயல்பட்டு வரும் ஜிம்மில், வழக்கம் போல சிலர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்றனர். மேலும, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன? என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கியுள்ளதால், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.