தாய்லாந்து பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தாய்லாந்து பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ADDED : ஜன 03, 2025 09:17 PM

பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பேடோங்தரன் ஷின்வத்ராவின் சொத்து மதிப்பு, 40 கோடி அமெரிக்க டாலர் என தெரியவந்துள்ளது.
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஸின் ஷின்வத்ராவின் மகள் பேடோங்தரன் அந்நாட்டு பிரதமர் ஆக கடந்த ஆண்டு செப்., மாதம் பதவியேற்றுக் கொண்டார்.இதனையடுத்து அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரத்தை தாக்கல் செய்ய வேண்டியது அந்நாட்டு சட்டப்படி அவசியம்.
இதன்படி தாக்கல் செய்த விவரங்கள் மூலம் அவரின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது. அவருக்கு மொத்தம் 1380 கோடி பாட்( தாய்லாந்து பணமதிப்பின்படி) உள்ளது தெரியவந்துள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 40 கோடி டாலர்கள் ஆகும். அவரிடம் விலை உயர்ந்த லட்சக்கணக்கு மதிப்பு வாய்ந்த 75 வாட்சுகள், 39 கைக்கடிகாரங்கள், கைப்பைகள் உள்ளன.
இதனை தவிர்த்து லண்டன், ஜப்பானில் சொத்துகள் உள்ளன. முதலீடு, மற்றும் வங்கி டெபாசிட் உள்ளது என அதில் கூறியுள்ளார். இவரின் தந்தையான தக்சின் சின்வத்ரா, மான்செஸ்டர் நகர கால்பந்து கிளப்பை தன் வசம் வைத்து இருந்தார். மேலும், அந்நாட்டில் தொலைத்தொடர்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். போர்ப்ஸ் நாளிதழின் பட்டியலில், தாய்லாந்தின் 10வது கோடீஸ்வரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து இருந்தது.

