ADDED : மே 12, 2025 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொழும்பு: இலங்கையில், 328 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 21 பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான இலங்கையில், புனித தலமான கதிர்காமத்தில் இருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு, 70க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக் கொண்டு, அரசு பஸ் நேற்று சென்றது.
கோட்மலை என்ற மலைப்பாங்கான பகுதியில், பஸ்சை இடது புறம் திருப்ப டிரைவர் முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் இருந்து விலகி, 328 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், 21 பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.