பாகிஸ்தான் தீ விபத்தில் 26 பேர் பலி; 70 பேர் மாயம்
பாகிஸ்தான் தீ விபத்தில் 26 பேர் பலி; 70 பேர் மாயம்
ADDED : ஜன 20, 2026 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கராச்சி: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 26ஆக உயர்ந்துள்ளது.
வணிக வளாகத்தின் தரைதளத்தில் இருந்த ஒரு கடையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ, மேலே இருந்த 3 மாடிகளுக்கும் பரவியது.
இந்த விபத்தில், 26 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 70 பேர் மாயமாகி உள்ளதாகவும், அவர்களுடைய நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

