கிரீஸ் நடுவானில் தீப்பிடித்த விமானம் 281 பேர் பத்திரமாக மீட்பு
கிரீஸ் நடுவானில் தீப்பிடித்த விமானம் 281 பேர் பத்திரமாக மீட்பு
ADDED : ஆக 19, 2025 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் தீவான கோர்பூவில் இருந்து ஜெர்மனியின் டூசல்டார்ப் நகருக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த, 273 பயணியர் தப்பினர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த, 'காண்டோர்' விமான நிறுவனத்தின் விமானம், கிரீசின் கோர்பூவில் இருந்து நேற்று புறப்பட்டது.
புறப்பட்ட சில நிமிடங்களில், நடுவானில் பறந்தபோது, திடீரென இன்ஜினில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவசரமாக தரையிறங்க இத்தாலியின் பிரின்டசி விமான நிலையம் அனுமதி அளித்தது. தீப்பற்றிய நிலையிலேயே, ஒரு மணி நேரம் பயணித்த விமானம், இத்தாலியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதில் பயணித்த, 273 பயணியர் மற்றும் எட்டு விமான ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.