மலேஷியா கடலில் படகு கவிழ்ந்து விபத்து 290 பேர் மாயம்; ஒருவர் பலி
மலேஷியா கடலில் படகு கவிழ்ந்து விபத்து 290 பேர் மாயம்; ஒருவர் பலி
ADDED : நவ 10, 2025 12:51 AM
கோலாலம்பூர்:: மியான்மரில் இருந்து 300 புலம்பெயர்ந்தோருடன் மலேஷியா நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில் 289 பேர் மாயமாகினர்.: கடலில் மிதந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டது; 10 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டதாக: அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.: கி ழக்கு ஆசிய நாடான மியான்மரில் இருந்து, 300 பேர் அடங்கிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று மலேஷியா நோக்கி சென்றது. மலேஷியாவின் பினாங்கு மாகாணம் அருகே சென்றபோது, அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த மலேஷிய கடற்படை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியை துவக்கியது.
இதையடுத்து, உயிரி ழந்த ஒருவரின் உடலையும், 10 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். இந்நிலையில், 289 பேர் மாயமாகி இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக, மலேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இ னப்படுகொலை, வறுமை உள்ளிட்ட காரணங்களினால் மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மலேஷியா, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் மேற்கொள்கின் றனர்.

