ADDED : நவ 10, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரேசிலா: தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில்.
இங்கு பரானா மாகாணத்தை சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் , கனமழையும் பெய்ததால் பல பகுதிகளில் கட்டடங்களில் கூரைகள், விளம்பர பலகைகள் சேதமடைந்தன. சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 432 பேர் காயமடைந்தனர். போலீசார், தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

