அமெரிக்காவில் சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு
அமெரிக்காவில் சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு
ADDED : ஏப் 27, 2024 01:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: அமெரிக்காவில்  சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு கரோலினாவின் கிரின்வில்லே கவுண்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், அதிவேகமாக  சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விலகி சென்றது. அங்கிருந்து 20 அடி உயரத்திற்கு மேலே பறந்து எதிரே இருந்த  மரத்தின் மீது மோதி  நொறுங்கியது.
இச்சம்பவத்தில் குஜராத்தின்  ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த  ரேகாபென் படேல்,  சங்கீதா பென் படேல் மற்றும் மணிஷா பென் படேல் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

