ரஷ்ய கப்பலில் பணியாற்றிய 3 இந்தியர்கள் விடுவிப்பு
ரஷ்ய கப்பலில் பணியாற்றிய 3 இந்தியர்கள் விடுவிப்பு
ADDED : ஜன 13, 2026 06:53 AM

வாஷிங்டன்: வெனிசுலா கடற்பகுதிக்கு அருகே சமீபத்தில் சிறைபிடித்த ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலில் பணியாற்றிய மூன்று இந்தியர்களை, அமெரிக்கா விடுவித்துள்ளது.
போதைப் பொருட்களை கடத்தி வருவதாக, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து புறப்படும் கப்பல்களை, அமெரிக்கா தாக்கி வருகிறது. மேலும், வெனிசுலாவில் இருந்து எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில், ரஷ்யாவின் கொடியுடன், வெனிசுலாவில் இருந்து புறப்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பலை, அமெரிக்க கடற்படை துரத்திப் பிடித்து, நடுக்கடலில் பறிமுதல் செய்தது.
அந்தக் கப்பலில் பணியாற்றிய, மூன்று இந்தியர்கள் உட்பட, 28 ஊழியர்களையும் அமெரிக்கா கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது.
இந்நிலையில், மூன்று இந்தியர்களும் நேற்று அமெரிக்க கடற்படையால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

