டைம்ஸ் ஸ்கொயரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம்; சிறுவன் விபரீத செயல்
டைம்ஸ் ஸ்கொயரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம்; சிறுவன் விபரீத செயல்
ADDED : ஆக 09, 2025 04:10 PM

நியூயார்க்: நியூயார்க்கின் பிரபல சுற்றுலா தலமான டைம்ஸ் ஸ்கொயரில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.
கடந்த 2022ம் ஆண்டு முதல் உலகின் மிகவும் பிரபல சுற்றுலா தலமான டைம்ஸ் ஸ்கொயர் பகுதிக்கு துப்பாக்கி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், இங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது
கடந்த 2024ம் ஆண்டு ஒரு கொள்ளை முயற்சியின் போது ஒரு போலீஸ்காரர் மற்றும் சுற்றுலாப் பயணி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் மறுபடியும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு நபர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.