வியட்நாமில் இடி விழுந்ததில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி
வியட்நாமில் இடி விழுந்ததில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி
ADDED : ஜூலை 20, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹானோய்:வியட்நாமில் இடி விழுந்து, படகு கவிழ்ந்ததில், 30 சுற்றுலா பயணியர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்; மேலும் 13 பேரைக் காணவில்லை.
ஆசிய நாடான வியட்நாமின் ஹா லாங்க் பே பகுதியில் உள்ள ஆற்றில், 48 பயணியர் மற்றும் ஐந்து ஊழியர்களுடன், படகு ஒன்று நேற்று பகலில் சென்று கொண்டிருந்தது. சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இந்த ஆற்றில் இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இடி விழுந்தது, பலத்த காற்றும் வீசியது. இதில், அந்த படகு தலைகீழாக கவிழ்ந்தது. உடனடியாக அருகில் உள்ளவர்கள், ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதே நேரத்தில், 30 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர காணாமல் போன, 13 பேரை தேடி வருகின்றனர்.