தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ கினியாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர்

கினியாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர்

கினியாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர்


ADDED : ஆக 24, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொனாக்ரி: மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனாக்ரியின் புறநகர் பகுதியான பெஸ்ஸியாவில், நேற்று முன்தினம், குப்பை மேடு சரிந்து வீடுகள் மீது விழுந்ததில் 30 பேர் பலியாகினர்; ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

கொனாக்ரியின் பெஸ்ஸியா பகுதியில் டார் – எஸ் – சலாம் என்ற திறந்தவெளி குப்பை கொட்டும் இடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டு இருந்தன.

இதன் அருகே ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அங்கிருந்த குப்பை மேடு ஒன்று சரிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கி 30 பேர் பலியாகினர்; ஆறு பேர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us