UPDATED : மே 01, 2024 10:10 PM
ADDED : மே 01, 2024 10:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் பல்கலை. வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து போராட்டம் நடத்திய 300 பாலலஸ்தீன ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் படையினருக்கும் காசா பகுதியில் போர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக பாலஸ்தீன ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று (01.05.2024) நியூயார்க் நகரில் உள்ள கொலம்பிய பல்கலை. கல்லூரி வளாகத்திற்குள் பாலஸ்தீன ஆதரவாளர்கள் சிலர் புகுந்தனர். ஹாமில்டன் ஹாலுக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த நியூயார்க் போலீசார் சில மாணவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்களை கைது செய்தனர்.