மருத்துவமனை மீது ராணுவம் தாக்கியதில் 31 பேர் பலி
மருத்துவமனை மீது ராணுவம் தாக்கியதில் 31 பேர் பலி
ADDED : டிச 12, 2025 01:31 AM

நேப்பிடோ: மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், நோயாளிகள், உறவினர்கள், மருத்துவ பணியாளர்கள் என 31 பேர் உயிரிழந்தனர்; 68 பேர் காயமடைந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால், ஜனநாயகத்தை ஆதரிக்கும் படைகளுக்கும், மியான்மர் ராணுவத்துக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதனால் ராணுவம் அவ்வப்போது வான்வழித் தாக்குதல் நடத்தி போராடுபவர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், மேற்கு ரக்கைன் மாநிலத்தின், மராக்யு நகரின் அரசு பொது மருத்துவமனை மீது மியான்மர் ராணுவத்தின் போர் விமானம், இரண்டு குண்டுகளை வீசியது. இதில், 31 பேர் உயிரிழந்தனர்; 68 பேர் காயமடைந்தனர்.

