லண்டனில் பா.ஜ., ஆதரவாளர்கள் பேரணி: மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
லண்டனில் பா.ஜ., ஆதரவாளர்கள் பேரணி: மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
UPDATED : ஏப் 29, 2024 10:45 AM
ADDED : ஏப் 29, 2024 10:44 AM

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
பிரதமர் மோடிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலானோர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்துவரும் சூழலில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பா.ஜ., கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர்.


