UPDATED : ஜூலை 27, 2011 09:19 AM
ADDED : ஜூலை 27, 2011 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதில் 35 பாகிஸ்தான் தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் தலிபான்களுக்கு எதிராக வேட்டையாடி வருகின்றனர். இந்நிலையில் பாகி்ஸ்தானின் வடக்கு வெஜிரிஸ்தான் மாகாணத்தில் நேற்று அமெரி்க்க விமானப்படைகள் திடீர் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் 35 பாகிஸ்தான் தலிபான்கள் உள்பட தலிபான்களின் முக்கிய தளபதிகளான ஹபீஸ்குல் பகதூர், முல்லா நஸீர் ஆகியோர் பலியாயினர், 12-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.