ஈரானுக்கு பதிலடி: பாக்., தாக்குதலில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
ஈரானுக்கு பதிலடி: பாக்., தாக்குதலில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
UPDATED : ஜன 18, 2024 03:44 PM
ADDED : ஜன 18, 2024 10:58 AM

டெஹ்ரான்: பலுசிஸ்தானில் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பயங்கரவாதிகளை குறிவைத்து, அதன் மற்றொரு அண்டை நாடான ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. அனைத்து அண்டை நாடுகளுடனும் மோசமான உறவில் உள்ள பாகிஸ்தானுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஈரானை கடுமையாக கண்டித்த பாகிஸ்தான் எச்சரிக்கையும் விடுத்தது.
இந்நிலையில், ஈரானில் புரட்சிப்படையினரை மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பல பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதேநேரத்தில், 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரான் கூறியுள்ளது.