தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ரஷ்ய பல்கலையில் இந்திய மாணவர்கள் 4 பேருக்கு கத்திக்குத்து

ரஷ்ய பல்கலையில் இந்திய மாணவர்கள் 4 பேருக்கு கத்திக்குத்து

ரஷ்ய பல்கலையில் இந்திய மாணவர்கள் 4 பேருக்கு கத்திக்குத்து


ADDED : பிப் 08, 2026 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 07:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாஸ்கோ: ரஷ்யாவின் உபாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் 4 இந்திய மாணவர்கள் உட்பட பலர் கத்தியால் குத்தப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

ரஷ்யாவின் உபாவில் பஷ்கா்தஸ்தான் பகுதியில் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் நுழைந்த 15 வயது சிறுவன், அங்கிருந்த மாணவா்கள் பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினான். இதில் பலர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களின் நான்கு இந்திய மாணவர்களும் அடங்குவர் என்பதை ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்து உள்ளது. காயம் அடைந்த இந்தியர்கள் நான்கு பேரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய முயற்சி செய்த போது இரண்டு போலீஸ் அதிகாரிகள் கத்தியால் குத்தப்பட்டனர். மேலும் தாக்குதல் நடத்தியது 15 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

உபாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் துரதிர்ஷ்டவசமாக ஒரு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் நான்கு இந்திய மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். அதிகாரிகள் தொடர்பில் இருக்கின்றனர். காயம் அடைந்த மாணவர்களுக்கு உதவி வழங்க, காசானில் உள்ள துணை தூதரக அதிகாரிகள் சென்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us