sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மலேசியா- இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

/

மலேசியா- இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

மலேசியா- இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

மலேசியா- இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

8


UPDATED : பிப் 08, 2026 10:00 AM

ADDED : பிப் 08, 2026 08:29 AM

Google News

8

UPDATED : பிப் 08, 2026 10:00 AM ADDED : பிப் 08, 2026 08:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: இந்தியா - மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. மலேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா -மலேசியா இடையே நட்பு மற்றும் உறவுகள் வலுவடைந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அழைப்பை ஏற்று, இரு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று அந்நாட்டிற்கு சென்றார். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 08) புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ராவில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது பிரதமர் மோடியை மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம், அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். பிரதமர் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு மற்றும் மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்து, ''நம்பிக்கை, நட்பு மற்றும் உறவை, இந்தியாவும் மலேசியாவும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன'' என குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை

பின்னர் மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு, இந்தியாவும், மலேசியாவும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இருநாட்டு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது; இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை, சமரசத்திற்கும் இடமில்லை. இந்தியாவும், மலேசியாவும் ஒரு சிறந்த உறவை கொண்டுள்ளன.

இன்று, இந்திய வம்சாவளி மக்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடு மலேசியா ஆகும். ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) உடன் இணைந்து, முழு இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் வளர்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. வர்த்தகம், முதலீடு, இணைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவும், மலேசியாவும் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us