தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஒரே ஆண்டில் கனடாவில் இருந்து 4526 இந்தியர்கள் வெளியேற்றம்!

ஒரே ஆண்டில் கனடாவில் இருந்து 4526 இந்தியர்கள் வெளியேற்றம்!

ஒரே ஆண்டில் கனடாவில் இருந்து 4526 இந்தியர்கள் வெளியேற்றம்!


ADDED : நவ 03, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2026 08:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கனடாவில் இருந்து 4526 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். செப்டம்பர் 30ம் தேதி வரையுள்ள கணக்கின்படி, ஒரே ஆண்டில் இத்தனை இந்தியர்கள் இதற்கு முன்னர் வெளியேற்றப்பட்டது இல்லை என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த தரவுகள் அனைத்தும், கனடாவின் எல்லைச் சேவைகள் முகமை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3 வகையான வெளியேற்ற உத்தரவுகள் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

அதன் விவரங்கள் வருமாறு;

2020ம் ஆண்டுக்கு பின்னர், இனவாரியான வெளியேற்றப்பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். அதே ஆண்டில் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை என்பது 12858 ஆகும்.

இவர்களில் 1424 பேர் இந்தியர்கள். ஒட்டு மொத்த வெளியேற்றத்தில் 11 சதவீதம் ஆகும். அடுத்தடுத்த ஆண்டுகளில் மெக்சிகோ நாட்டினர் தான் அதிகளவில் வெளியேற்றப்பட்டனர்.

இந்த ஆண்டு 4526 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். கனடாவில் மீண்டும் நுழைய தகுதியற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 3779.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us