உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
பமாகோ: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், பயங்கரவாத குழு ஒன்று நடத்திய தாக்குதல்களில், 48 பேர் கொல்லப்பட்டனர்.
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, உள்நாட்டு பயங்கரவாத குழு, கடந்த, 18ம் தேதி இரவில் இருந்து, நேற்று முன்தினம் வரை, மெனாகா பிராந்தியத்தில் உள்ள கிராமத்தில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது.
தங்களுடைய இருப்பிடம் குறித்து அரசு படைகளுக்கு தகவல் கொடுத்ததற்காக இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த தாக்குதல்களில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 48 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தப்பியோடிய பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
