4-வது டி-20 போட்டி : சஞ்சு சாம்சன் - திலக் வர்மா ஜோடி புது சாதனை
4-வது டி-20 போட்டி : சஞ்சு சாம்சன் - திலக் வர்மா ஜோடி புது சாதனை
ADDED : நவ 15, 2024 11:30 PM

ஜோகனஸ்பர்க்: இந்திய -தென் ஆப்ரிக்கா நான்காவது 'டி-20' போட்டியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடி இருவரும் சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்தனர்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. தற்போது இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது.
இதில் முதலில் டாஸ் வென்ற பேட்டிங் செய்ய களம் இறங்கியது.
இதில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களம் இறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் இணைந்து ரன் மழை பொழிந்தனர்.
இதில் அதிரடியாக ஆடிய திலக் வர்மா 47 பந்துகளில் 10 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் குவித்தார். சஞ்சு சர்மா 56 பந்துகளில் 9 சிக்சர்கள், 6 பவுண்ட்ரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். இருவரும் ஆட்டமிழக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. டி-20 போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது தான். இப்போட்டியில் அதிகபட்சமாக 23 சிக்சர்கள் அடித்து சாதனை படைக்கப்பட்டன. 93 பந்துகளில் 210 ரன்கள் குவிக்கப்பட்டது.