முதல் அணுமின் நிலையத்திற்கு இலங்கையில் 5 இடங்கள் தேர்வு
முதல் அணுமின் நிலையத்திற்கு இலங்கையில் 5 இடங்கள் தேர்வு
ADDED : ஜூலை 29, 2025 05:55 AM
கொழும்பு; இலங்கையில் முதல் அணுமின் நிலையம் அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, அணுசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தது. இதற்கு, 2010ம் ஆண்டில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பின்னர், 2019ல் அணுசக்தி திட்ட அமலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அணுமின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதை ஆய்வு செய்த, சர்வதேச அணுசக்தி முகமை, 2-022ல், பல பரிந்துரைகளை வழங்கியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, முகமையின் நிபுணர் குழு, இலங்கையில், கடந்த 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை, உள்கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு செய்தது. முகமை பணிக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை செயல்படுத்துவதில், இலங்கை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக நிபுணர்கள் பாராட்டினர்.
இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து, நாட்டின் முதல் அணுமின் நிலையம் அமைப்பதற்காக, இலங்கை அரசு ஐந்து இடங்களை பரிந்துரை செய்தது. அவற்றை, சர்வதேச அணுசக்தி முகமை ஏற்றுக் கொண்டுள்ளது.