அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
UPDATED : ஏப் 15, 2025 06:37 AM
ADDED : ஏப் 15, 2025 06:36 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் ஜூலியன் பகுதி, நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மக்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரத்தில், கலிபோர்னியாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.