தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சுவிட்சர்லாந்து பஸ் தீப்பற்றி 6 பயணியர் பலி

 சுவிட்சர்லாந்து பஸ் தீப்பற்றி 6 பயணியர் பலி

 சுவிட்சர்லாந்து பஸ் தீப்பற்றி 6 பயணியர் பலி


ADDED : மார் 12, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 01:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெர்ன்: சுவிட்சர்லாந்தில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்ததில், பயணியர் ஆறு பேர் உடல் கருகி பலியாகினர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்னுக்கு அருகே உள்ள கெர்ஸர்ஸ் என்ற சிறிய நகரத்தில், 'போஸ்டல் பஸ்' எனப்படும் அரசுக்கு சொந்தமான ப ஸ் நேற்று முன் தினம் மாலை சென்று கொண்டிருந்தது.

நகரின் மையப் பகுதியில் சென்றபோது, பஸ் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், தீ வேகமாக பரவியதால் உடனடியாக அணைக்க முடியவில்லை.

இந்த விபத்தில், பயணியர் ஆறு பேர் உயிரிழந்தனர் ; பலர் காயம் அடைந்தனர். இது தற்செயலான விபத்து அல்ல; வேண்டுமென்றே தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

பஸ்சில் பயணித்த ஒருவர் எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சுவிட்சர்லாந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us