சூடான் அமைதிப்படை வீரர்கள் 6 பேர் ட்ரோன் தாக்குதலில் பலி
சூடான் அமைதிப்படை வீரர்கள் 6 பேர் ட்ரோன் தாக்குதலில் பலி
ADDED : டிச 15, 2025 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்ட்டூம்: சூடானில்: வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023 முதல் அதிகார மோதல் நீடித்து வருகிறது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமைதியை நிலைநாட்ட, ஐ.நா., சார்பில் அமைதிப்படை அங்கு முகாமிட்டுள்ளது.
சூடானின் தெற்கு மாகாணமான கோர்டோபானில் ஐ.நா., அமைதிப்படை தளம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தளத்தை குறிவைத்து ஆர்.எஸ்.எப்., வீரர்கள் ட்ரோன் மூலம் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.
எதிர்பாராதவிதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அமைதிப்படை தளத்தில் இருந்த வங்கதேச படை வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; எட்டுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

