அமெரிக்கா 'டிரேக் பாசேஜ்' பகுதியில் 7.8 ரிக்டரில் நிலநடுக்கம்
அமெரிக்கா 'டிரேக் பாசேஜ்' பகுதியில் 7.8 ரிக்டரில் நிலநடுக்கம்
ADDED : அக் 11, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சான்டியாகோ:தென் அமெரிக்காவின் தென் முனைக்கும், அண்டார்டிகாவுக்கும் இடையில் உள்ள 'டிரேக் பாசேஜ்' எனப்படும் கடல் பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை, 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் மதிப்பீட்டின்படி, 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை உடனடியாக வெளியிட்டன.
இருப்பினும், ஒரு மணி நேரத்திற்கு பின், இந்த சுனாமி எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன. இந்நிலநடுக்கம், கடலில் ஏற்பட்டதால் பெரிய உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.