ADDED : அக் 29, 2025 12:22 AM

கேமரூன்
யாவுண்டே:: கேமரூனில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில்: மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில், 1982ம் ஆண்டு முதல், பியா ஆட்சி செய்து வருகிறார். இவர், உலகின் வயதான அதிபர் என்ற பெருமையை பெறுகிறார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், பால் பியா 53.66 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றதாகவும், இவரை எதிர்த்து போட்டியிட்ட இசா டிச்சிரோமா 35.19 சதவீத ஓட்டுகளை பெற்றதாகவும் அந்நாட்டு அரசியலமைப்பு கவுன்சில் தெரிவித்தது.
ஆனால், இதை பியாவின் முன்னாள் கூட்டாளியான இசா டிச்சிரோமா ஏற்கவில்லை. தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டார்.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் தேர்தல் முடிவை வெளியிடும் அதிகாரம் பெற்ற உச்ச நீதிமன்றம், கடந்த அக்டோபர் 12ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், பால் பியா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 43 ஆண்டுகளாக பியா, கேமரூனை ஆட்சி செய்து வருகிறார். தற்போதைய வெற்றி, பியாவின் எட்டாவது பதவிக் காலம் என கூறப்படுகிறது.

