மிகுந்த எதிர்பார்ப்பில் கமலா ஹாரிஸ் - டிரம்ப் நேரடி விவாதம்
மிகுந்த எதிர்பார்ப்பில் கமலா ஹாரிஸ் - டிரம்ப் நேரடி விவாதம்
ADDED : செப் 11, 2024 02:17 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையேயான நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, போட்டியிட்டார். எனினும் கடந்த ஜூனில் நடந்த நேரடி விவாதத்தின் போது பைடன் திணறியதால், போட்டியிலிருந்து விலகினார்.
இதையடுத்து துணை அதிபரும்,இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இருவரும் முதன்முறையாக நேரடியாக விவாதம் நடத்தும் நிகழ்வு இன்று காலை (செப்.11 ) நடைபெறுகிறது.பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் இந்த விவாதம் நடைபெறுகிறது.
நேரடி விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி., ஒளிபரப்பு நிறுவனம் செய்து வருகிறது. 90 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சவால் என்ன?
முன்னதாக நடந்த நேரடி விவாதத்தில் 81 வயது பைடனை எதிர்கொண்டார் டிரம்ப். தற்போது அவரை விட இளையவரான கமலா ஹாரிசுடன் விவாதம் நடத்துகிறார். இந்த விவாதத்தை காண அமெரிக்கர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால் இன்று நடக்கும் விவாதம் டிரம்ப்பிற்கு கடும் சவாலாக இருக்கும்.

