நமீபியாவில் உற்சாக வரவேற்பு; மேளம் கொட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி!
நமீபியாவில் உற்சாக வரவேற்பு; மேளம் கொட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி!
ADDED : ஜூலை 09, 2025 01:14 PM

விந்தோக்: நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, அடுத்த கட்டமாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றார். நமீபியாவின் விண்ட்ஹோக்கில் தரையிறங்கிய மோடியை அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்றார்.
பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி, வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு குதூகலமாக பிரதமர் மோடி மேளம் கொட்டி மகிழ்ந்தார். நமீபியா அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை மோடி நடத்த உள்ளார். அந்நாட்டு பார்லியிலும் உரையாற்ற உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
சற்று முன்பு விண்ட்ஹோக்கில் தரையிறங்கினேன். நமீபியா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். இன்று நமீபியா பார்லிமென்டில், உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.