பிரிட்டனின் 'பிரிட் கார்டு' திட்டத்துக்கு முன்னோடி ஆனது 'ஆதார்' அட்டை
பிரிட்டனின் 'பிரிட் கார்டு' திட்டத்துக்கு முன்னோடி ஆனது 'ஆதார்' அட்டை
ADDED : அக் 19, 2025 12:40 AM

லண்டன்: இந்தியாவின் 'ஆதார் டிஜிட்டல்' அடையாள அட்டை திட்டத்தை, பிரிட்டன் கொண்டு வர உள்ள 'பிரிட் கார்டு' திட்டத்திற்கான முன்மாதிரியாக பார்ப்பதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா வந்திருந்த பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், இந்தியாவின் டிஜிட்டல் அடையாள திட்டமான ஆதாரை மிகப்பெரிய வெற்றி என பாராட்டினார்.
வேலைவாய்ப்பு மேலும், இத்திட்டத்தின் வடிவமைப்பாளரும், 'இன்போசிஸ்' இணை நிறுவனருமான நந்தன் நீல்கேனியை சந்தித்து, ஆதார் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
இந்தியாவின் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டு, பிரிட்டனிலும் ஒரு டிஜிட்டல் அடையாள திட்டமான, 'பிரிட் கார்டு' திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 'பிரிட் கார்டு, ஆதார் திட்டத்திலிருந்து மாறுபட்டு இருக்கும்' என ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரிட்டன் கொண்டு வர உள்ள பிரிட் கார்டு திட்டத்தின் முன்னோடியாக ஆதார் கார்டை பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆதார் கா ர்டில் உள்ளது போன்று பயோ மெட்ரிக் தரவுகள் இதில் சேர்க்கப்படாது என தெரிவித்த ஸ்டாமர், சட்டவிரோத வேலைவாய்ப்புகளை தடுப்பதில் கவனம் செலுத்த இது பயன் படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு, ஆளுங்கட்சியிலேயே இருக்கும் சில உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, தனியுரிமை அச்சுறுத்தல்கள் காரணமாக பொதுமக்களின் ஆதரவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது-.
நலத்திட்டங்கள் இத்திட்டத்தை கைவிடக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கானோர் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஆதார் அடையாள அட்டை, வங்கி, வரி, நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளை பெறுவதை எளிதாக்குகிறது.
மேலும், நிர்வாகச் செலவுகளை குறைக்க இத்திட்டம் உதவியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.