sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அடிமாட்டு விலைக்கு போர்க் கப்பல்கள் விற்பனை : நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை

/

அடிமாட்டு விலைக்கு போர்க் கப்பல்கள் விற்பனை : நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை

அடிமாட்டு விலைக்கு போர்க் கப்பல்கள் விற்பனை : நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை

அடிமாட்டு விலைக்கு போர்க் கப்பல்கள் விற்பனை : நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை


ADDED : ஆக 17, 2011 01:01 AM

Google News

ADDED : ஆக 17, 2011 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன் : கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிரிட்டன், அதிலிருந்து சிறிதளவாவது மீள வேண்டும் என்பதற்காக, தனது விமானந்தாங்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள், ராணுவ ஹெலிகாப்டர்களை விற்க முன்வந்துள்ளது.



பிரிட்டன் ராணுவ அமைச்சகத்தின் இந்தாண்டு பட்ஜெட்டில், 36 பில்லியன் பவுண்டு (ஒரு பவுண்டு - 70 ரூபாய்.

ஒரு பில்லியன் - 100 கோடி) துண்டு விழுந்துள்ளது. இந்தத் தொகையை சரி செய்வதற்காக, அமைச்சகத்தின் இணையதளத்தில், போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்களை விற்பதற்கான ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல மில்லியன் பவுண்டுகளில் தயாரிக்கப்பட்ட கப்பல், ஹெலிகாப்டர்கள் வெறும் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட உள்ளன. 200 மில்லியன் பவுண்டு செலவழித்து கட்டப்பட்ட, 'எச்.எம்.எஸ்., ஆர்க் ராயல்' என்ற விமானந்தாங்கிக் கப்பலுக்கு, தற்போது வெறும் 3.5 மில்லியன் பவுண்டு தான் ஏலத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 'டைப் 22' போர்க் கப்பல்கள் ஒவ்வொன்றும் 400 மில்லியன் பவுண்டில் உருவாக்கப்பட்டவை. அவற்றின் தற்போதைய விற்பனை விலை வெறும் 3 லட்சம் பவுண்டு தான். இந்த விற்பனைப் பட்டியலில், 13 'கேசல்' ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட 'ஜாகுவார்' கார்கள், 'லேண்ட் ரோவர்' ஜீப்புகள், மோட்டார் பைக்குகள், ராணுவ வீரர்கள் அணியும் கவச உடைகள் இவை அனைத்தும் ஏலத்துக்குத் தயாராக உள்ளன.



இவை தவிர, மேசை, நாற்காலிகள் என பல்வேறு அறைகலன்களும், துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ் பாண்ட் அணிந்து வருவதைப் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கைக்கடிகாரங்களும், மருந்துப் பொருட்களும், தொப்பி உள்ளிட்ட உடைகளும் விற்பனை செய்யப்பட உள்ளதாக, ராணுவ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தவிர, ராணுவத்தின் வசம் உள்ள புகழ் பெற்ற ஓவியங்களை, வெறும் 18 பவுண்டுக்கு விற்கவும் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்போதைய நிலையில் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை பொருட்களையும் விற்றால் கூட, ராணுவ அமைச்சகத்துக்கு வெறும் 4 பில்லியன் டாலர் மட்டுமே தேறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சகத்தின் மிகப் பெரிய நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க இயலாது என்பதும் தெளிவாகியுள்ளது.



ராணுவ அமைச்சகத்தின் இந்த முடிவு குறித்து, 'கன்சர்வேடிவ்' கட்சி எம்.பி., பாட்ரிக் மெர்சர் கூறுகையில், 'நீங்கள் இந்த விலை மதிப்பற்ற ராணுவப் பொருட்களை விற்கலாம். ஆனால், அடுத்த வாரமே அவை தேவைப்படலாம். இவை அனைத்தும் மில்லியன் கணக்கில் பணத்தைச் செலவழித்து வாங்கியவை. இன்று வெறும் வேர்க்கடலைக்காக விற்கப்படுகின்றன' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.



மற்றொருவர் கூறுகையில், 'எதையாவது விற்றாவது தனது பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டன் ராணுவம் உள்ளது' என்றார். மூத்த ராணுவ அதிகாரிகள் இந்த ஏலத்தை விரும்பவில்லை. ராணுவத்துக்கு மிகவும் அவசியமான பொருட்கள் கூட, ஏலப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு அவர்கள் மனம் குமுறுகின்றனர்.



பொருட்கள் உண்மையான விலை தற்போதைய விலை (தலா; பவுண்டு)

எச்.எம்.எஸ்., ஆர்க் ராயல் 200 மில்லியன் 3.5 மில்லியன் (விமானந்தாங்கி கப்பல்)

'டைப் 22' ரக போர்க்கப்பல் 400 மில்லியன் 3 லட்சம்

'கேசல்' ஹெலிகாப்டர் 5 மில்லியன் 1 லட்சம்

ஜாகுவார் கார் 2 லட்சம் 12 ஆயிரம்

'லேண்ட் ரோவர்' ஜீப் 65 ஆயிரம் இரண்டாயிரம்








      Dinamalar
      Follow us