ADDED : அக் 03, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், நம் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்காசிய பிராந்தியத்தின் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். ஈரானுக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும்.
டெஹ்ரானில் உள்ள நம் துாதரகத்துடன் அவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்பு நெறிமுறைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.