இந்திய தாளத்திற்கு ஏற்ப ஆப்கன் ஆடுகிறது: பாகிஸ்தான்
இந்திய தாளத்திற்கு ஏற்ப ஆப்கன் ஆடுகிறது: பாகிஸ்தான்
ADDED : அக் 30, 2025 12:51 AM

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் உடனான அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்ததற்கு இந்தியா தான் காரணம் என்றும், தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானை இந்தியா துாண்டி விடுவதாகவும் பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் - ஆப்கன் இடையே எல்லைச் சண்டை நடந்து வருகிறது. சண்டையை நிறுத்த கத்தாரில் இரு தரப்பு அமைதிப் பேச்சு நடந்தது.
அதில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து துருக்கியில், இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு நடைபெற்றது; ஆனால், அது தோல்வியடைந்தது. மூன்று நாள் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை.
'பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாகிஸ் தானின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அதற்கு ஆப்கானிஸ்தான் ஒப்புக்கொள்ளவில்லை' என, பாக்., தரப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பேசியுள்ளதாவது:
இந்தியாவின் தாளத்திற்கு ஏற்றவாறு தலிபான்கள் நடனமாடுகின்றனர்.
ஆப்க னை ஒரு கைப்பாவை போன்று வைத்துக்கொண்டு, இந்தியா காய் நகர்த்துகிறது.
பாக்., மீது மறைமுக போர் தொடுக்க ஆப்கானிஸ்தா னை பயன் படுத்துகிறது.
நாங்கள் ஒரு உடன்பாட் டை நெருங்கும்போதெல்லாம், ஒரு தலையீடு இருந்தது. அதனால் பேச்சு தோல்வி அடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கண்களைப் பிடுங்கி எறிவோம். எங்கள் மீது யார் போர் தொடுத்தாலும் 50 மடங்கு வலிமையான பதிலடி கொடுப்போம்.
இவ்வாறு கவாஜா கூறியுள்ளார்.

