ஜப்பானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானையும் உலுக்கிய நிலநடுக்கம்: அரை மணிநேரத்தில் இருமுறை குலுங்கியது
ஜப்பானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானையும் உலுக்கிய நிலநடுக்கம்: அரை மணிநேரத்தில் இருமுறை குலுங்கியது
ADDED : ஜன 03, 2024 08:03 AM

காபூல்: ஜப்பானில் நிலநடுக்கத்தால் 62 பேர் உயிரிழந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பான் நாட்டில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது. அடுத்த 3 மணி நேர இடைவெளியில் சுமார் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அனைத்து நிலநடுக்கங்களும் 4.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் அந்நாட்டில் 62 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஆப்கானஸ்தானின் பைசாபாத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தெரிவித்து இருக்கிறது. முதல் நிலநடுக்கம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12:28 மணிக்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ தொலைவில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12:55 மணிக்கு இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.8 ரிக்டர் அளவில் பூமியில் இருந்து 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.