இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி: அமெரிக்கா பாணியில் மெக்சிகோ முடிவு
இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி: அமெரிக்கா பாணியில் மெக்சிகோ முடிவு
ADDED : டிச 11, 2025 02:41 PM

மெக்சிகோ சிட்டி: அமெரிக்காவை போல இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து மெக்சிகோ அறிவித்து உள்ளது.
அமெரிக்க பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை உயர்த்த, அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, ஏப். 2ம் தேதி, முதல்கட்டமாக 25 சதவீதமும்; இரண்டாம் கட்டமாக ஆக. 27ல் மீண்டும், 25 சதவீதமும் வரி அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து மெக்சிகோ உத்தரவிட்டது. இந்தியா, சீனா மற்றும் பல ஆசிய பொருளாதாரங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை புதிய வரிகளை விதிக்க மெக்சிகோ ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்தியா மட்டுமின்றி சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதிக்க மெக்சிகோ பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவே இந்த வரியை விதித்துள்ளதாக, மெக்சிகோ அதிபர் கிளாடகயா ஷீன்பாமின் தெரிவித்தார்.
வரி விதிக்கும் முடிவை சீனா கடுமையாக விமர்சித்து உள்ளது. சீனா உட்பட வர்த்தக கூட்டாளிகளின் நலன்களுக்கு கணிசமாக தீங்கு விளைவிக்கும் என கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு நடவடிக்கை இந்தியா-மெக்சிகோ ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

