ADDED : செப் 24, 2024 02:02 AM

கொழும்பு, இலங்கை அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே, 56, அந்நாட்டின் அதிபராக நேற்று பதவியேற்றார்.
நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த 21ல் அதிபர் தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இவற்றில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே, சமாகி ஜன பலவேகயாவின் சஜித் பிரேமதாசா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
யாருக்கும் 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகள் கிடைக்காததால், இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே, முதன்முறையாக விருப்ப ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இதன் முடிவுகளில், அனுரா குமார திசநாயகே 55.89 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். சஜித் பிரேமதாசா 44.11 சதவீத ஓட்டுகள் பெற்றார். அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் அலுவலகத்தில், நேற்று பதவியேற்பு விழா நடந்தது. அப்போது, இலங்கையின் ஒன்பதாவது அதிபராக, அனுரா குமார திசநாயகே பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, இலங்கை பிரதமர் பதவியை தினேஷ் குணவர்தன ராஜினாமா செய்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
இடதுசாரி ஆதரவாளரான அனுரா குமார திசநாயகே, இலங்கை அதிபராக பதவியேற்ற பின், நாட்டு
தொடர்ச்சி 11ம் பக்கம்