ADDED : ஜூலை 05, 2024 09:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டோவா: கனடாவின் முதல் பெண் ராணுவ தளபதியாக ஜென்னி கேரிங்கனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடே உள்ளார். இந்நாட்டின் உயர் பதவிகளில் ஆண் அதிகாரிகளே நியமனம் செய்யப்பட்ட நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே , ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்த வேண்டி, நாட்டின் உயரிய பாதுகாப்பு அமைப்பான ராணுவ தளபதியாக ஜென்னி கேரிங்கனை பிரதமர் நியமித்தார்.
இவர் ராணுவத்தில் பல்வேறு பதவிகளை பொறுப்பேற்று வந்த நிலையில், தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் 18-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் ராணுவ தளபதி என்ற பெருமை பெற்றுள்ளார்.