sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

யாராக இருந்தாலும் அழிப்போம்; ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

/

யாராக இருந்தாலும் அழிப்போம்; ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

யாராக இருந்தாலும் அழிப்போம்; ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

யாராக இருந்தாலும் அழிப்போம்; ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை


ADDED : மார் 04, 2026 01:42 PM

Google News

ADDED : மார் 04, 2026 01:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் மொஜ்தபா, ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும், உலகத்தையும், பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. ஈரான் மக்களை அடக்கவும், திட்டத்தைத் தொடரவும், வழிநடத்தவும் ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் ஒழிக்கப்பட வேண்டிய இலக்காக இருப்பார்கள்.

ஈரான் மக்கள் ஆட்சியைத் தூக்கியெறிந்து அதை மாற்றுவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும், ஆட்சியை அகற்றுவதற்கும், எங்கள் அமெரிக்க கூட்டாளிகளுடன் சேர்ந்து, முழு பலத்துடன் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். இவ்வாறு காட்ஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us