sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆசிய ஹாக்கி: கோப்பை வெல்லுமா இந்தியா... இன்று சீனாவுடன் ' பைனல்' மோதல்

/

ஆசிய ஹாக்கி: கோப்பை வெல்லுமா இந்தியா... இன்று சீனாவுடன் ' பைனல்' மோதல்

ஆசிய ஹாக்கி: கோப்பை வெல்லுமா இந்தியா... இன்று சீனாவுடன் ' பைனல்' மோதல்

ஆசிய ஹாக்கி: கோப்பை வெல்லுமா இந்தியா... இன்று சீனாவுடன் ' பைனல்' மோதல்


ADDED : செப் 17, 2024 07:14 AM

Google News

ADDED : செப் 17, 2024 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹுலுன்பியுர்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்தியா.இன்று(செப்.,17) நடக்கும் பைனலில் சீனாவை சாய்த்து, மீண்டும் கோப்பை வெல்ல காத்திருக்கிறது.

சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி லீக் சுற்றில் தொடர்ந்து 5 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதியில் நேற்று இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது. பந்து இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது. 13 வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ராஜ்குமார் அடித்த பந்தை பெற்ற உத்தம் சிங், அதே வேகத்தில் கோலாக மாற்றினார். 19 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் கோல் அடித்தார் கேப்டன் ஹர்மன்பிரீத்சிங். முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முந்தியது.

ஹர்மன்பிரீத் கலக்கல்


இரண்டாவது பாதி துவங்கிய 2வது நிமிடத்தில் இந்திய வீரர் சுமித், பந்தை காற்றில் துக்கி அடித்தார். நீண்ட துாரத்தில் இருந்து வந்த பந்தை பெற்ற ஜர்மன்பிரீத் சிங் (32வது), அதே வேகத்தில் அடித்து, கோலாக மாற்றினார். அடுத்த நிமிடம் தென் கொரிய வீரர் ஜிஹுன் (33வது) 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோல் அடித்தார்.

45வது நிமிடம் மீண்டும் மிரட்டியது இந்தியா. இம்முறை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், மீண்டும் கோல் அடித்தார். இத்தொடரில் இவர் அடித்த 7வது கோல் இது. முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. தென் கொரியா வெளியேறியது.

தொடருமா ஆதிக்கம்:


ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இன்று, இந்தியா, சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன் இரு அணிகள் மோதிய 23 போட்டியில் இந்தியா 17ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. 3ல் சீனா வெல்ல, 3 போட்டி 'டிரா' ஆனது.

ஆசிய சாம்பியன்ஸ் தொடரில் இரு அணிகளும் 6 முறை மோதின. இதில் இந்தியா 5ல் வெற்றி பெற்றது. 1ல் சீனா வென்றது.

இத்தொடரில் இரு அணிகள் மோதிய லீக் போட்டியில் இந்திய அணி 3-0 என்று கணக்கில் வெற்றி பெற்றது.

6வது முறை:


ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் பைனலுக்கு இந்தியா 6வது முறையாக முன்னேறியது. இதில் 2011, 2016, 2018, 2023 என நான்கு முறை கோப்பை வென்றது. ஒருமுறை (2012) 2வது இடம் பிடித்தது. இன்று வென்றால், 5வது கோப்பை கைபற்றலாம்.






      Dinamalar
      Follow us