தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஏமனில் தாக்குதல் 22 பேர் பரிதாப பலி

ஏமனில் தாக்குதல் 22 பேர் பரிதாப பலி

ஏமனில் தாக்குதல் 22 பேர் பரிதாப பலி


UPDATED : நவ 07, 2026 07:51 PM

ADDED : நவ 07, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 07:51 PM ADDED : நவ 07, 2026 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கெய்ரோ: ஏமன் தலைநகர் சனா அருகே உள்ள கிராமம் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியா ஆதரவு பெற்ற ஏமன் அரசு படைகளுக்கு இடையே உச்சக்கட்ட மோதல் முற்றி வருகிறது.

இந்நிலையில், ஏமன் தலைநகர் சனா அருகே உள்ள அல் – ஷாரியா கிராமத்தின் மீது கொடூரமான முறையில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சவுதி அரேபிய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முன்னதாக, இரு தினங்களுக்கு முன், ஏமனில் உள்ள அல் – ஹதரா சந்தை பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

இதன் மூலம் கடந்த இரு தினங்களில் மட்டும் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us