ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்: 28 பேர் பலி
ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்: 28 பேர் பலி
UPDATED : பிப் 04, 2024 06:05 PM
ADDED : பிப் 04, 2024 05:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீவ்: உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க்கில் நடந்த தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த ஆண்டு முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்த லிசிசான்ஸ்க்கில் உள்ள பேக்கரி ஒன்றில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேருக்கு இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உக்ரைன் ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. அதேநேரத்தில் உக்ரைன் ராணுவம் இதுவரை எந்த தகவலும் கூறவில்லை.