ADDED : ஏப் 03, 2026 07:08 AM

அ நிறம் | அளவு
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை, ஏவுகணையால் தாக்கியதாக ஈரான் அரசு ஊடகங்கள் வீடியோ வெளியிட்டுள்ளன. இது முவாபக் சால்தி விமான தளம் அல்லது அச்ராக் பகுதியில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டானில் உள்ள இந்த தளம் அமெரிக்க விமா னப் படையின் முக்கிய மையமாக செயல்படுகிறது. இங்கு, 'தாட்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்புடன் தொடர்புடைய ரேடார் அமைப்புகள் இருந்தன. முந்தைய தாக்குதல்களில் இந்த ரேடார் அமைப்பு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய தாக்குதலை ஜோர்டானோ, அமெரிக்காவோ உறுதிப்படுத்தவில்லை.
