UPDATED : ஜன 25, 2025 05:22 PM
ADDED : ஜன 25, 2025 04:58 PM

மெல்போர்ன்: ஆஸி., ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் சாம்பியன் ஆனார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, 'நடப்பு சாம்பியன்' பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் மடிசன் கீசை ('நம்பர்-14') எதிர்கொண்டார். அதில், முதல் செட்டை மடிசன் கீஸ்,6- 3 என வென்றார்.
ஆனால், இரண்டாவது செட்டை அவர் 2-6 என இழந்தார். பின்னர் சுதாரித்து கடுமையாக போராடிய மடிசன் கீஸ் 3வது செட்டை 7-5 என தன்வசப்படுத்தினார். முடிவில் மடிசன் கீஸ் 6-3, 2-6,7-5 என்ற செட் கணக்கில் வென்று, முதல் முறையாக ஆஸி., ஓபன் கோப்பையை கைப்பற்றினார்.
தொடர்ந்து இரண்டு முறை ஆஸி., ஓபன் கோப்பையை கைப்பற்றிய சபலென்கா, 3வது முறையாக அதனை கைப்பற்ற முயற்சித்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியடைந்தது.